மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட
குளறுபடிகளை ஊடகங்கள் ஊடாக வெளிக் கொண்டு வந்த அந்த பகுதி சங்கங்களைச்
சேர்ந்தவர்கள் விசமிகள் என தெரிவித்த கருத்திற்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
பாலமீன்மடு கிராம அபிவிருத்தி சங்க கட்டிட பகுதியில் நேற்று (22.12.2025)
ஊடக மாநாட்டை நடாத்தி பொதுமக்கள் பொது அமைப்பு பிரதிநிதிகள் தமது கண்டனத்தை வெளியிட்டனர்.
குறித்த பிரதேசத்தில் 410 குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் 85 வீதமானோர் கடற்றொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டனம்
இந்தநிலையில், கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது 95
வீதமான வீடுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த
மாநகர சபை உறுப்பினரின் சிபாரிசுக்கு அமைய 25 பேருக்கு மட்டும் 25 ஆயிரம் ரூபா
பணம் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்பட்டு முறைகேடு இடம்பெற்றுள்ளது.
அந்த
பகுதியைச் சேர்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள் ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் அமிர்தகழியைச் சேர்ந்த சயந்தன் மற்றும் லைற்கவுஸ் கிளப், கோயில்
ஒன்றின் நிர்வாகத்தினர் இணைந்து எமது சங்கங்களின் பிரதிநிதிகளை விசமிகள் என
கருத்து தெரிவித்துள்ளனர்.
இது வன்மையாக கண்டிக்கபட வேண்டும்.அதேவேளை இந்த நிவாரணம் வழங்குவதில் குளறுபடி இடம் பெற்றதை சுட்டிக்காட்டியது
பிழையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இழிவுபடுத்தும் செயல்
இந்த கிராமத்தில் தொழிற்சங்க தலைவர் மற்றும் ஓய்வு
பெற்ற கிராம சேவகர், பிரையா பொலிஸ் குழு தலைவர், ஓய்வூதிய சங்க தலைவர் உட்பட
பல பொது அமைப்புக்கள் நீண்டகாலமாக இருந்து செயல்பட்டு வருகின்ற எங்களை ஒரு
அமைப்பையும் சார்ந்தவர்கள் இல்லை விசமிகள் என பொய்களை கூறி இடம்பெற்ற மோசடியை
மூடி மறைக்க செயற்பட்டு வருகின்றனர் எனவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி செயற்பட்டு வரும் எமது
கிராமத்தைச் சேர்ந்த சங்கங்களின் பிரதிநிதிகளை விசமிகள் என தெரிவித்துள்ளமை
எமது கிராம மக்களையும் இழிவுபடுத்தும் செயல் எனவும் மக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
