Home இலங்கை சமூகம் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இளைஞர் கழகங்களை ஸ்தாபிப்பது குறித்து மகஜர் கையளிப்பு!

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இளைஞர் கழகங்களை ஸ்தாபிப்பது குறித்து மகஜர் கையளிப்பு!

0

Courtesy: Satheeshkumar.S

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் தோட்டப்புறங்கள தோறும் இளைஞர் கழகங்களை ஸ்தாபிக்குமாறு வழியுறுத்தபட்டுள்ளது.

மகஜர் 

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தேசிய இளைஞர் விவகார அமைச்சும் இணைந்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென வழியுறுத்தி,நுவரெலியா மாவட்ட நோர்வூட் சம்மேளன இளைஞர் கழகத்தால், நோர்வூட் பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்று நேற்று (04.06.2025) கையளிக்கபட்டுள்ளது.

குறித்த மகஜரில்,எங்கள் இளைஞர் கழகத்திற்கான இரண்டு ஏக்கர் காணியினை ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் ஊடாக புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு ஒரு இளைஞர் கழகம் மாத்திரம் அமைக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

கோரிக்கை 

இந்நிலையில், மலையக பகுதியை தவிர்ந்த ஏனைய பகுதிக்கு இந்த முறைமை பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால் இளைஞர்கள் அதிகமாக காணப்படுகின்ற இந்த மலையக பகுதிக்கு குறித்த சுற்றுநிருபம், முற்றுமுழுதாக மலையக இளைஞர்களை புறக்கணிக்கின்ற சுற்றுநிருபமாகவே பார்க்கப்படுகின்றது.

எனவே குறித்த சுற்றுநிருபத்தை மீள் திருத்தம் செய்து தோட்டபுறங்கள் தோறும் இளைஞர் கழகங்களை பதிவு செய்து கொள்வதற்கு இளைஞர் விவகார அமைச்சும் ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version