Home இலங்கை சமூகம் எமது கடலையும் கடற்றொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும்: ஜனாதிபதியிடம் கோரிக்கை

எமது கடலையும் கடற்றொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும்: ஜனாதிபதியிடம் கோரிக்கை

0

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இலஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை
எடுப்பது போல எமது கடற்றொழிலாளர்களையும், கடலையும் காப்பாற்ற
வேண்டும் என வடக்கு மாகாண கூட்டுறவு சமாசங்களின் உப தலைவர் வி.அருள்நாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (30.09.2024) காலை இடம்பெற்ற ஊடக
சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தற்பொழுது கடற்தொழில் அமைச்சராக ஜனாதிபதி இருப்பதால் நாம் சில
கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

உரிய நடவடிக்கை

இந்திய இழுவைபடகுகள் மட்டுமல்லாது சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகள், அங்கீகரிக்கப்படாத தொழில்கள் எமது
கடற்பகுதிகளில் செய்கிறார்கள். இரவு பகுதிகளில் சுருக்குவலை, டைனமிற் ஆகியவை பயன்படுத்தபடுகின்றது.

இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆகவே ஜனாதிபதி
இலஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றார்.

அதே போன்று, எமது கடற்றொழிலாளர்களையும், கடலையும் காப்பாற்றவேண்டும்.
அத்துடன், சட்டவிரோத தொழிலை நிறுத்தி சட்டத்திற்குட்பட்ட தொழிலை செய்ய
நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல் – தவசீலன்

NO COMMENTS

Exit mobile version