Home இலங்கை சமூகம் யாழ்.பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைக்க விடுக்கப்பட்ட கோரிக்கை

யாழ்.பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைக்க விடுக்கப்பட்ட கோரிக்கை

0

யாழ்ப்பாணம் (Jaffna) சிறப்பு பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைப்பதற்கு வடக்கு
மாகாண சபையின் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுந்தேசம் அமைப்பு
கோரிக்கை விடுத்துள்ளது.

அது தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பொருளாதார மத்திய நிலையங்கள் முழுமையாக சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நோக்கங்களைக்
கொண்டவை.

ஆனாலும் அவை மொத்த சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகவும்,
உற்பத்திப் பிரதேசங்களை மையமாகவும் கொண்டவை.

விவசாயப் பொருட்கள் உற்பத்தி 

சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை என்ற வகையில் தான் யாழ்ப்பாணம்
பொருளாதார மத்திய நிலையமானது, யாழ்ப்பாணம் விவசாயிகள் தமது உற்பத்திகளை தகுந்த
விலையில் விற்பனை செய்வதற்கும், நுகர்வோர் குறைந்த விலையில் மரக்கறிகள்
பழங்களை கொள்வனவு செய்வதற்குமான வசதிகளை உருவாக்கும் நோக்கில் 20.03.2022 அன்று
திறக்கப்பட்டது.

இந்த யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயங்கவைப்பதன் மூலம் அதிக நன்மை
பெறப்போகின்றவர்கள் தமது கடின உழைப்பின் மூலம் விவசாயப் பொருட்களை உற்பத்தி
செய்யும் விவசாயிகளே.

யாழ்ப்பாண
நுகர்வோருக்கு தேவையான தென்பகுதி உற்பத்திப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளவும்
சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டதாக  இயங்குநிலைக்கு வருவதனை உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகளின் சார்பாக
வடக்கு மாகணசபையின் ஆளுநரைக் கேட்டுக்கொள்கின்றோம் என கடிதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version