Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் அமைக்கப்பவுள்ள 5GB தொலைத்தொடர்பு கோபுரத்தை அகற்றுமாறு கோரிக்கை

கிளிநொச்சியில் அமைக்கப்பவுள்ள 5GB தொலைத்தொடர்பு கோபுரத்தை அகற்றுமாறு கோரிக்கை

0

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர்
பிரிவுக்குட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள ஏ 35
பிரதான வீதி அருகில் 5GB தொலைத்தொடர்பு கோபுரம் தற்பொழுது நிறுவப்பட்டு வருவதற்கு மக்கள் பெரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக
பிரதேச செயலகத்திடமிருந்து எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பகுதியில் எமக்கு 5ஜிபி தொலைத் தொடர்பு கோபுரம் தேவையில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கோரிக்கை 

இந்தக் போபுரம், எமக்கும் எமது உறவுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு எமது சந்ததியையே
அழித்துவிடும் என அவர்கள் கூறுகின்றனர்.

எனவே, கோபுரம் இப்பகுதியில் இருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version