Courtesy: Subramaniyam Thevanthan
தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்தியப் பிரதமர் சந்திக்கக் கூடாது என வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா இன்றைய தினம்(05) கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது அவ் வீதியால் சென்ற மக்களுக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
