Home இலங்கை சமூகம் மியன்மாரில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

மியன்மாரில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

0

மியன்மாரின் (Myanmar) சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு (Ministry of Foreign Affairs) தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் (Thailand) குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் இவ்வாறு மீட்கப்பட்ட  அனைவரும் நலமுடன் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடு

தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக குறித்த குழுவினரை இலங்கைக்கு அழைத்துவர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சுமார் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அவர்களில் 8 பேர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டடிருந்தனர்.

இதேவேளை மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் மேலும் 28 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version