சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் மீட்புக்குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
வானிலை காரணமாக சேதமடைந்த அனைத்து வீதிகள் மற்றும் பாலங்களையும் உடனடியாக மீட்டெடுப்பதற்கான அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
அனர்த்த நிலைமை
இதேவேளை, நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது.
இந்த அனர்த்தத்தினால் 366 பேர் காணாமல்போயுள்ளதுடன், அவர்களில் பலர் மண்ணில் புதையுண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
