நோர்வூட் பகுதியில் இடி மின்னல் தாக்கத்தினால் ஒரு குடியிருப்பின் கூரை பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் இடம்பெற்று உள்ளது.
பலத்த சேதம்
குறித்த வீட்டில் இவ்வாறு மின்னல் தாக்கம் ஏற்பட்டபோது இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு அங்கத்தினர்கள் அந்த வீட்டில் இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் வீட்டின் கூரை பலத்த சேதமடைந்துள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
