Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது அவசியம் : சர்வதேச நாணய நிதியம்

இலங்கையில் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது அவசியம் : சர்வதேச நாணய நிதியம்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், நிதி மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டிய முக்கியமான தேவையை, சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. 

நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குனர் ஜூலி கோசாக் (Julie Kozack), இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

வர்த்தகக்கொள்கை

நாடு எதிர்கொள்ளும் சிக்கலான  வர்த்தகக்கொள்கை தொடர்பிலேயே, அவர் இந்த பதிலை வெளியிட்டுள்ளார்.

சம்பளங்கள் மற்றும் ஏழைகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டம் போன்றவற்றில் கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கையில் நிலைமை மோசமாகவே இருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், இலங்கையின் பொருளாதாரம் அதன் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு மட்டுமன்றி, 2022ல் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நிலைமைகள் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கும் நிதி மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது அவசியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் நிதிக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான ஆதாரங்களின் தேவை குறித்து கருத்துரைத்த அவர்,  சமமான வரி முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version