காட்டு யானை தாக்கி ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் புத்தளம், நவகத்தேகம, தம்மென்னாவெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளும் பலத்த சேதம்
உயிரிழந்தவர் நவகத்தேகம, குருகெட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர்
ஆவார்.
இவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது வீதியின் குறுக்கே
இருந்த காட்டு யானை தாக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது.
