Home முக்கியச் செய்திகள் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பாரிய போராட்டம்

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பாரிய போராட்டம்

0

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (2) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டம் காரணமாக காலி முகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் செல்லும் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கலந்துரையாட சந்தர்ப்பம்

இந்நிலையில், பேராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆறு ​பேருக்கு ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

https://www.youtube.com/embed/G52BhYp-BWE

NO COMMENTS

Exit mobile version