இலங்கையில் வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சகம் (Ministry of Public Administration) தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார (Aloka Bandara) தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல்
இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என செயலாளர் மேலும் தெரிவித்தார்.