Home இலங்கை சமூகம் யாழ். திரும்பிய 71 வயதுடைய அகதி கைது : ஆத்திரத்தில் சுமந்திரன்

யாழ். திரும்பிய 71 வயதுடைய அகதி கைது : ஆத்திரத்தில் சுமந்திரன்

0

இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நாடு திரும்பிய 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (29.05.2025) யாழ்.பலாலியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட முதியவர் இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்துள்ளார்.

பலாலி விமான நிலையம்

பின்னர் நாடு திரும்பிய போது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவர் இன்று (30.05.2025) மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜூன் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவரிடம் நாடு திரும்புவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்கள் இருந்தும், சர்வதேச சட்டப்படி அவர் ஒரு அகதி என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி

இந்நிலையில், இச்சம்பவமானது நாடு திரும்புவதற்கு தயாராக இருக்கும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள், நாட்டிற்கு பயந்து வராமல் இருப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

X தளத்தில் பதிவு ஒன்றை வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எனது சேவை பெறுநரின் அனுமதியோடு இந்தப் பதிவை செய்கிறேன்.

இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

நாடு திரும்புவதற்குத் சர்வதேச சட்டப்படி அவர் ஒரு “அகதி” என்ற பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க எதிர்த்த காரணத்தினால் ஜூன் 5ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாடு திரும்புவதற்கு தாயாராக இருக்கும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயந்து வராமல் செய்வதற்கான ஏற்பாடா இது” என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version