Home இலங்கை சமூகம் திருகோணமலையில் நியாயமற்ற விலையில் அரிசி விற்பனை: எடுக்கப்பட்ட நடவடிக்கை

திருகோணமலையில் நியாயமற்ற விலையில் அரிசி விற்பனை: எடுக்கப்பட்ட நடவடிக்கை

0

Courtesy: H A Roshan

அரிசி விலையை அதிகரித்து விற்றதால் திருகோணமலையில் இரண்டு கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு  நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று(12) விசேட சுற்றிவலைப்பொன்றை மேற்கொண்டிருந்த போதே இவ்வாறு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு கடையில் சிவப்பு அரிசி 280 ரூபாவிற்கும் இன்னொரு கடையில் வெள்ளை பச்சை அரிசி 270 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்திய பின்பு இரு கடைகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தண்டப்பணம் 

கடை உரிமையாளர்கள், ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த நேரிடலாம் என நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version