Home இலங்கை சமூகம் நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

இலங்கையில் நாட்டரிசி கிலோ ஒன்றுக்கான கட்டுப்பாட்டு விலையை 240 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தினை ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா (Muthith Perera) குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அரிசி விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டரிசி விற்பனை 

தற்போது நாட்டரிசி ஒரு கிலோ 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாவிட்டால் அரிசி வியாபாரிகளுக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version