Home இலங்கை சமூகம் பொங்கல் பொங்குவதற்கு அரிசி இல்லை! அரசிடம் உடனடி தீர்வு கோரும் மலையக மக்கள்

பொங்கல் பொங்குவதற்கு அரிசி இல்லை! அரசிடம் உடனடி தீர்வு கோரும் மலையக மக்கள்

0

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி
அக்கரப்பத்தனையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு ஆர்பாட்டமானது மன்றாசி நகரிலுள்ள வர்த்தகர்களால் இன்று (10.01.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நகர வர்த்தகர்களும், பொது மக்களும் கலந்துக் கொண்டு
சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அரிசி தட்டுப்பாடு

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில்
நுகர்வோருக்கு விற்கமுடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதனால் சிறு
வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள்
தெரிவித்துள்ளனர்.

போராட்டகாரர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் தைப்பொங்கல் வருகின்றது. இதற்கு பொங்கல் பொங்குவதற்கு சிவப்பு அரிசி
உள்ளிட்ட அரிசி வகைகள் தேவைப்படுகின்றது. எனினும், அரிசி தட்டுப்பாடு
நிலவுகின்றது.

கட்டுப்பாட்டு விலைக்கு தான் எங்களுக்கு அரிசி வழங்கப்படுகின்றது. அவ்வாறு
கட்டுப்பாட்டு விலையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள்
எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கொழும்பிலிருந்து இந்த பகுதிக்கு அரிசியை கொண்டு வருவதாக இருந்தால்
போக்குவரத்து கட்டணம், சுமை தாங்கிகளின் கட்டணம் என பல விடயங்கள் இருக்கின்றன.

எனவே, கட்டுப்பாட்டு விலைக்கு விற்கமுடியாத சூழ்நிலை இருக்கின்றது. 

ஆகவே, கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கும், அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி
செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என போராட்டத்தில்
ஈடுப்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version