Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் மூடப்பட்டிருந்த நெல் களஞ்சியசாலை: இராணுவத்தின் துரித செயற்பாடு

முல்லைத்தீவில் மூடப்பட்டிருந்த நெல் களஞ்சியசாலை: இராணுவத்தின் துரித செயற்பாடு

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பல வருடமாக இயங்காதிருந்த நெல் களஞ்சியசாலையை இயங்க
வைக்கும் நோக்கில் இராணுவத்தினால் துப்பரவு பணிகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த துப்பரவு பணிகள் நேற்றையதினம்(20.01.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – திம்பிலி பகுதியில் அமைந்திருந்த நெல்
களஞ்சியசாலையானது கோவிட் காலப்பகுதிக்கு பின்னர் நெல் கொள்வனவு
செய்யப்படாமையால் பல வருடங்களாக பாவனையற்று காணப்பட்டிருந்தது.

துப்பரவு பணியின் நோக்கம்

இதனால் பல சமூக சீர்கேடுகள் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் அங்கு இடம்பெறுவதனால் குறித்த இடம் இராணுவத்தின் ஏற்பாட்டில் நெல் கொள்வனவை
மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் துப்பரவு செய்யப்பட்டிருந்தது.

புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலுள்ள 593 படைப்பிரிவின் 59 பிரிவிலுள்ள
இராணுவத்தினரால் குறித்த துப்பரவு பணி இடம்பெற்று கோம்பாவில் கமக்கார
அமைப்பின் செயலாளர் ஏ.பிரதீபராசாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. 

NO COMMENTS

Exit mobile version