Home முக்கியச் செய்திகள் வாகனம் வாங்க சரியான நேரம் இதுவே..! வெளியான அறிவிப்பு

வாகனம் வாங்க சரியான நேரம் இதுவே..! வெளியான அறிவிப்பு

0

விலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து சந்தை நிலையாக இருப்பதால், நுகர்வோர் வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன விலைகள் மீதான சமீபத்திய அழுத்தம் தணிந்துள்ளதாகவும், சந்தை மிகவும் சமநிலையான நிலையை எட்டியுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே குறிப்பிட்டுள்ளார்.

2026 வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2.5 வீத சமூக பாதுகாப்பு வரி (SSL) குறித்து கருத்து தெரிவித்த மெரெஞ்சிகே, இது ஒரு புதிய வரி அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

விற்பனைக்குப் பிறகு வரி 

வாகன விற்பனைக்குப் பிறகு வரி வசூலிக்காமல், சுங்கத்தில் வாகனங்கள் இருக்கும் போத வரியை வசூலிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விற்பனைக்குப் பிறகு வரி வசூலிப்பது இறக்குமதியாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு தேவையற்ற சிக்கல்களை உருவாக்கியதால், இந்த மாற்றம் தொழில்துறையால் கோரப்பட்டதாக மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

விலை ஏற்ற இறக்கத்தின் போது கொள்முதலை ஒத்திவைத்த வாங்குபவர்களுக்கு தற்போதைய சூழல் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version