ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன RTI என்ற இலங்கை தகவல்
அறியும் உரிமை ஆணையக தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த மார்ச் 4ஆம் திகதியன்று அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.
அனுப்பப்பட்ட தகவல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய தகவல் மூலம் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் பதவி விலகியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், RTI ஆணையகம் நான்கு ஆணையர்களையும்
அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு
தலைவரையும் கொண்டிருக்கும்.
எனினும் பதவி விலகலுக்கான காரணங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
