Home இலங்கை பொருளாதாரம் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்! இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள சிக்கல்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்! இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள சிக்கல்

0

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள், கணிக்க முடியாத அளவுக்கு சிலோன் தேயிலை ஏற்றுமதியை (Ceylon Tea) பாதிக்கும் என்று தொழில்துறை பங்குதாரர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக நாட்டின் தேயிலையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவு மத்திய கிழக்கு பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்த மோதல் நிலை இலங்கை(Sri Lanka) பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

 

செங்கடல் தாக்குதல்

செங்கடல் தாக்குதலில் இருந்து உருவாகும் சிக்கல்கள் ஏற்கனவே நீண்ட விநியோக நேரம் மற்றும் அதிக சரக்கு செலவுகளுடன் தொழில்துறையை பாதித்திருந்தாலும், மற்றவற்றுடன் வான்வெளியை மூடுவது போன்ற புதிய சிக்கல்கள் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, ஏற்றுமதி பொருளின் மாதிரிகளை அனுப்புவது மற்றும் ஆர்டர்களை பெறுவது என்பவை கடினமாக்கப்படும்.

உள்ளூர் வாழ்வாதாரம்

இது தேயிலையை நம்பியிருக்கும் மக்களின் விலைகள் மற்றும் உள்ளூர் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிக்கலாம் என்று தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வளைகுடாவில் மோசமான நிலைமை உடனடியாக தேயிலை விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுக்திய சோதனை நடவடிக்கை தொடர்பில் ஜப்பான் பாராட்டு

யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version