Home இலங்கை சமூகம் அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சரியும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சரியும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்கள் மற்றும் பல்வேறு சொத்துக்களுக்கான நிலுவையில் உள்ள 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான கடன்கள் மற்றும் குத்தகை தவணைகளை வசூலிக்க முடியாது உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அகில இலங்கை சொத்து கையகப்படுத்தல் நிபுணர்கள் சங்கத்தின் செயலாளர் பிரியந்த லியனகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு பகுதிகளில் கடன் அல்லது குத்தகை தவணைகளை செலுத்தத் தவறிய பலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலுவையில் உள்ள தவணைகள் வசூலிக்கப்படாவிட்டால், அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சரிந்துவிடும் அபாயம் உள்ளது. இது அரசாங்கம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதை தடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சொத்து பறிமுதல் முறைப்பாடு

தாம் சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட சங்கம் என்பதுடன், அதிகாரிகள் ஒழுக்கமானவர்கள் எனவும், தமது பணியைத் தடையின்றி மேற்கொள்ள எங்களுக்கு அனுமதி அளிக்குமாறு பொலிஸ் தலைமையகத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

சொத்து பறிமுதல் முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டு, தேவையான நடவடிக்கை எடுக்கவும். முறைப்பாடுகளை ஏற்காத பட்சத்தில் நீதிமன்றத்திற்கு செல்லவும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சொத்துக்களின் கடன் தவணைகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், சங்கத்தை தொடர்பு கொள்ளுமாறும், அதற்காக இலவச சேவைகளை வழங்க தயாராக உள்ளதாகவும், போலியானவர்களினால் ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version