Home இலங்கை சமூகம் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து: அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து: அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு எச்சரிக்கை

0

நாட்டில் ஏற்பட்ட பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் தங்குமிடங்களில் கண் நோய்கள் பரவக்கூடும் என்று கண் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சரியான சுகாதாரப் பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் இந்த நிலைமையை தடுக்க முடியும் என்று கண் மருத்துவர் குசும் ரத்நாயக்க கூறியுள்ளார்.

தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம்

குறிப்பாக பாதுகாப்பு முகாம்களில், மக்கள் குழுக்களாக கூடும்போது தொற்று நோய்கள் அதிகமாக ஏற்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்கள் சிவப்பு நிறமாக மாறும் போது அதனை நாம் கண் புண், கண் இமை அழற்சி என்று அழைக்கின்றோம்.இது காற்று மூலம் பரவும் ஒரு நோய்.இது விரைவாகவும் பரவக்கூடும்.மக்கள் ஒரே இடத்தில் கூடும்போது இதுபோன்ற தொற்று நோய்களின் பரவல் அதிகமாகும்.

எனவே, ஒருவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டால்,அடிக்கடி கண்களைத் தொடுவதைத் தவிர்ப்பதும் மிகவும் முக்கியம்.

ஏனெனில் இந்த நோய் பரவத் தொடங்கினால்,ஏனையவர்களுக்கும் பரவும்.இது தேவையற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version