நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 870 பேர் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த எட்டு மாத காலப்பகுதியில் ஆயிரத்து 757 வீதி விபத்துக்கள் நடைபெற்றுள்ளது.
வாரம் ஒன்றுக்கு எட்டுப் பேர்
சராசரியாக வாரம் ஒன்றுக்கு எட்டுப் பேர் வீதம் வீதி விபத்துக்களால் உயிரிழந்து கொண்டிருப்பதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.
பெரும்பாலான வீதி விபத்துக்கள் சாரதிகளின் கவனக்குறைவின் காரணமாகவே நடைபெற்றுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
