Home முக்கியச் செய்திகள் யாழில் அதிகரிக்கும் விபத்துக்களுக்கு காரணம் இதுதான் – காவல்துறை அதிர்ச்சி தகவல்

யாழில் அதிகரிக்கும் விபத்துக்களுக்கு காரணம் இதுதான் – காவல்துறை அதிர்ச்சி தகவல்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெறும் விபத்துகளில் அதிகமானவை மோட்டார் சைக்கிள்களாலேயே ஏற்படுகின்றன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதுவும் குறிப்பாக எவ்.சற் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக செலுத்தியதாலேயே ஏற்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் போக்குவரத்து தொடர்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விபத்துகளும் – மரணங்களும் அதிகம்

மேலும், பிரதான வீதிகளில் அதிவேகத்தில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் கிளை வீதிகளுக்கு திரும்பும் சந்தர்ப்பங்களிலும் கிளை வீதிகளில்
இருந்து பிரதான வீதிகளுக்கு பிரவேசிக்கும் சந்தர்ப்பங்களில் தான் விபத்துகளும் – மரணங்களும் அதிகம் சம்பவித்துள்ளன.

இவற்றில் தமிழ் மக்களே அதிகளவில் பலியாகின்றனர் என யாழ். மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் யாழ். மாவட்டத்தில் சாரதி பயிற்சி வழங்கும் நிறுவனங்கள்
முறையாக பயிற்சிகளை வழங்குகின்றனவா அங்கு முறைகேடுகள் இடம்பெறுகின்றனவா என்பவை தொடர்பில் காவல்துறையினர் உன்னிப்பாக அவதானிக்க
வேண்டும் என்று அமைச்சர் பிமல்ரத்நாயக்கா அறிவுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version