கொழும்பில் பலத்த காற்று உட்பட கடுமையான வானிலை காரணமாக பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.
கடுமையான மழை மற்றும் பலத்த காற்று காரணமாக வீதிகளில் மரங்கள் விழுந்ததால் குறித்த வீதிகள் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
போக்குவரத்து தடை
இதற்கமைய, கொழும்பு வீதிகளில் பயணிப்போர் முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தடை ஏற்பட்டுள்ள வீதிகள் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், பொதுமக்கள் தங்களது பயணப்பாதைகள் குறித்து கவனமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
அதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது பலத்த காற்று (மணிக்கு 50-60 கிலோமீட்டர்) வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
