Courtesy: Sivaa Mayuri
வீட்டுத் தோட்டத்தில் போலியான இரத்தினக் கற்களை புதைத்து வைத்துவிட்டு, மோசடியில் ஈடுபட்ட ஜோதிடர் ஒருவர், மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தோட்டத்தில் புதையல் புதைக்கப்பட்டிருப்பதாக, வீட்டு உரிமையாளர் ஒருவரை தவறாக வழிநடத்தி, அதை வெளிக்கொணரும் சடங்குகளை மேற்கொண்ட ஜோதிடர் ஒருவரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், புதையல் தோண்டியதற்கான பகுதிக் கொடுப்பனவாக 2.9 மில்லியன் ரூபாய் பணத்தை ஏமாற்றி பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படகிறது.
2.9 மில்லியன் ரூபா
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
அனுராதபுரம் விமான நிலைய வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய வர்த்தகரே இந்த சம்பவத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக, குறித்த வீட்டின் உரிமையாளர் நேற்று முன்தினம் தனது உழவு இயந்திரத்தை 2.9 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்.
இதனையடுத்து, விற்பனை செய்த பணத்தை அவர் வீட்டில் வைத்திருந்தநிலையில், உழவு யந்திரத்தை கொள்வனவு செய்தற்காக வந்ததாக கூறிய ஒருவர் தம்மை ஜோதிடர் என்று தம்மை அறிமுகப்படுத்தியுள்ளார்.
போலி ரத்தினக் கற்கள்
அத்துடன் வீட்டுக்குள் நுழையும் போதே, தோட்டத்தில் புதையல் புதைக்கப்பட்டிருப்பதை தாம் உணர்வதாக வீட்டு உரிமையாளரிடம் கூறியுள்ளார்.
இதனை வீட்டு உரிமையாளரையும் நம்ப வைத்துள்ளார்.
பின்னர், இரவில் இரகசியமாக தோட்டத்திற்குள் நுழைந்து போலி ரத்தினக் கற்களை புதைத்துவிட்டு, மறுநாள் வீட்டின் உரிமையாளரைச் சந்தித்து புதையல் தோண்ட ஏற்பாடு செய்துள்ளார்.
தன்னுடன் உதவியாளராக அழைத்து வந்திருந்த பாம்பு பிடிப்பவர் ஒருவரின் உதவியுடன் ஜோதிடர் புதையல் தோண்டும்போது ரகசியமாக வீட்டுத் தோட்டத்தில் நாகப்பாம்பை காட்டி, புதையலைக் காக்கும் ஆவிதான் அது என்று உரிமையாளரிடம் கூறி, அதனையும் நம்ப வைத்துள்ளார்.
இந்தநிலையில், சந்தேக நபர் சடங்குகளை செய்து போலி ரத்தினக் கொத்தை தோண்டி எடுத்ததுடன், நாகப்பாம்பு புதையலைக் காக்கும் ஆவி என்றும் அதைக் காயப்படுத்தக்கூடாது என்றும் கூறி, வீட்டின் உரிமையாளரை பயமுறுத்துவதற்காக, பாம்பு பிடிப்பவரின்; உதவியுடன் நாகப்பாம்பை வீட்டிற்குள் வைத்துள்ளார்.
அத்துடன் தோண்டி எடுத்த போலி ரத்தினகற்களின் மதிப்பு 40 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என வீட்டு உரிமையாளரிடம் அவர் கூறியுள்ளார்
எனவே புதையலை தோண்டுவதற்கு தனது பங்காக 5 மில்லியன் ரூபாய்களை தரவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
பெரும் அதிர்ஷ்டம்
இந்தநிலையில் பெரும் அதிர்ஷ்டம் வந்து விட்டதாக மகிழ்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், உழவு இயந்திரத்தை விற்றதன் மூலம் தனக்குக் கிடைத்த 2.9 மில்லியன் ரூபாயை போலி ஜோதிடரிடம் கொடுத்ததுடன்,இரத்தினக் கற்களை விற்ற பின்னர் மீதித் தொகையை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதன்போது, அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் இரத்தினக் கற்களை எடுத்துச் சென்று ஆவிகளை மகிழ்விக்கும் வகையில் சமயச் சடங்குகளை மேற்கொள்ளுமாறும், அதுவரை வீட்டில் உள்ள விகாரைக்கு அருகில் இரத்தினக் கற்களை வைத்து வழிபடுமாறும் ஜோதிடர் அவருக்கு ஆலோசனை வழங்கி, ஓரிரு நாட்களில் தாம் வருவதாகவும் உறுதியளித்து சென்றுள்ளார்.
இருப்பினும், ஜோதிடர் கூறிய தினத்தில் வராததால், வீட்டின் உரிமையாளர் நகைக்கடைக்காரர் ஒருவரால் இரத்தினக்கல் ஒன்றைப் பரிசோதித்தபோது, அது போலியானது என்பதை தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், ஒரு கொள்ளைக்காரனுக்கு இரையாகிவிட்டதாக வெட்கப்பட்ட அவர், ஒரு கொள்ளைக்காரன், ஒருவன் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து துப்பாக்கி முனையில் 2.9 மில்லியன் ரூபாயை கொள்ளையிட்டு சென்றதாக பொலிஸில் பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார்.
இருப்பினும், முறைப்பாட்டின்; நம்பகத்தன்மையை சந்தேகித்த பொலிஸார் விசாரணை நடத்தியபோது, குறித்த வீட்டு உரிமையாளர்; உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.