நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் புதல்வி ரொஷேல் அபேகுணவர்தன பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை, வலான மோசடித் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று மாலைக்குள் அவரை மதுகம மாஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நீண்ட விசாரணையின் பின்னர்
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனுக்கு விற்னை செய்ததாக ரொஷேல் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ரொஷேல் அவரது கணவரை கைது செய்யுமாறு மத்துகம நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
சில நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், ரொஷேல் இன் கணவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் காலையில் ரொஷேல், வலான மோசடித் தடுப்புப் பிரிவு பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக முன்னிலைகியிருந்தார்.
நீண்ட விசாரணையின் பின்னர் அவரைக் கைது செய்துள்ளதாக தற்பொழுது பொலிசார் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே ரொஷேல் நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்படும் வேளையில் அவருக்காக வாதாட கொழும்பில் இருந்தும் சில முக்கிய சட்டத்தரணிகள் களுத்துறை நோக்கி விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
