Home இலங்கை சமூகம் இன்று கண்டியில் நடைபெறவுள்ள அரச நிகழ்வு!

இன்று கண்டியில் நடைபெறவுள்ள அரச நிகழ்வு!

0

தமிழ் மற்றும் சிங்கள புது வருட கொண்டாட்டங்களை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இன்று(16) காலை முற்பகல் 9.04 மணியளவில் சுப நேரத்தில் கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நாத தேவாலய பூமியில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும், இவ்வரச நிகழ்வு நடைபெறவுள்ளது.

அரச நிகழ்வு

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது. 

மகா விகாரையின் விகாராதிபதி ஷ்யாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மற்றும் அஸ்கிரி உகய பிரிவின் மகாநாயக்க சுவாமியின் அனுஷ்டானங்களைத் தொடர்ந்து இந்நிகழ்வின் செயற்பாடுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி மற்றும் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ். பி. எஸ். அபயகோன் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version