நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் தென்னை மரங்கள், தென்னை மரக்கன்றுகள் அழிவடைந்தமைக்கு விவசாயிகளுக்கு தலா 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த பேரழிவால் தென்னை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இழப்பீட்டு செயன்முறையை எளிதாக்குவதற்கு பொதுமக்கள் பொருத்தமான தகவல்களை சமர்ப்பிக்குமாறு தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி கேட்டுக்கொண்டுள்ளார்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கிளிநொச்சியில் உள்ள தென்னை பயிர்ச்செய்கை சபையின் விதை தேங்காய் நாற்றுக்களில் ஏராளமான தென்னை மரக்கன்றுகள் மூழ்கி அழிவடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அழிக்கப்பட்ட மரங்கள்
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக எதிர்காலத்தில் புதிய தென்னை மரக்கன்றுகளை மீண்டும் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜெயக்கொடி மேலும் கூறினார்.
இதேவேளை, சூறாவளி மற்றும் வெள்ளத்தால் தென்னை சார்ந்த தொழில்களுக்கு ஏற்பட்ட சேதம் தோராயமாக 1,576 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரை தென்னை சார்ந்த 87 தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
