Home இலங்கை சமூகம் யாழில் நிவாரணம் வழங்காததால் மாணவன் முறைப்பாடு: எடுக்கப்பட்ட நடவடிக்கை

யாழில் நிவாரணம் வழங்காததால் மாணவன் முறைப்பாடு: எடுக்கப்பட்ட நடவடிக்கை

0

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா
அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு யாழ்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.
பிராந்திய அலுவலகம் கோரியுள்ளது.

இரண்டு நாட்களுக்குள் எழுத்துமூலம் பதில் வழங்குமாறு காலக்கெடு குறித்து
கடிதம் அனுப்பியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25000
ரூபாய் கொடுப்பனவுக்கு வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீடு புறக்கணிக்கப்பட்டு
விட்டதாக புதன்கிழமை மாணவர் ஒரு முறைப்பாடொன்றை முன்வைத்திருந்தார்.

மனித உரிமைகள் 

குறித்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் அவர் பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.
பிராந்திய அலுவலகம், “அரசாங்கத்தின் 25000 ரூபா நிவாரணத் தொகை வீட்டுக்கானதா
அல்லது தனிநபருக்கானதா” என்ற விளக்கத்தை இரு நாட்களுக்குள் எழுத்து மூலம்
ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சண்டிப்பாய் பிரதேச செயலாளரை கேட்டுக்
கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version