பல மாதங்களின் பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துளளது.
அதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 313.16 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுக்கமைய, அதன் கொள்முதல் விலை 305.57 ரூபாவாக காணப்பட்டுள்ளது.
டொலரின் விற்பனை விலை
இறுதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதமே அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313 ரூபாவை தாண்டிய நிலையில் தற்போது இந்த வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இறக்குமதி செலவுகள் அதிகரித்து வருவதாலும் டொலருக்கான தேவை அதிகரிப்பதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
