Home இலங்கை சமூகம் ரஷ்யாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதில் புதிய சிக்கல்!

ரஷ்யாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதில் புதிய சிக்கல்!

0

ரஷ்யா-உக்ரைன் போரில் சிக்கியுள்ள இலங்கை முன்னாள் படையினரை மீட்பதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

ரஷ்ய படையில் இணைந்து கொண்ட ஒரு தொகுதி இலங்கையர்கள் ரஷ்ய குடியுரிமை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்ய குடியுரிமை

அதிகாரபூர்வமான வழிகளில் சிலர் ரஷ்ய குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் சிலர் அந்நாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சிலர் எதிர்வரும் மாதங்களில் ரஷ்ய குடியுரிமை பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்ய பிரஜைகளை அந்நாட்டிலிருந்து இலங்கை அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியாது என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நட்டஈடு 

ரஷ்யாவில் கடமையாற்றி வரும் சில இலங்கையர்கள் நாடு திரும்புவது குறித்த யோசனைகளை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் குடும்பத்தினருக்கு போதியளவு தெளிவு கிடையாது என இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவில் போரில் இணைந்து கொண்டு உயிரிழந்த இலங்கையர்களது குடும்பங்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க முயற்சித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version