Home இலங்கை சமூகம் உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் : பற்றி எரியும் குடியிருப்புகள்

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் : பற்றி எரியும் குடியிருப்புகள்

0

உக்ரைன் மீது “ஷாஹேத்” டிரோன்கள் மூலம் ரஷ்யா மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளத.

728 ட்ரோன்கள், 13 குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

போலந்து, பெலாரஸ் எல்லையில் உக்ரைனின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள லுட்ஸ்க் என்ற நகர் மீது கடுமையாக தாக்கியுள்ளது. 

முக்கிய நகரங்கள் மீதும் தாக்குதல் 

மேலும் 10 பிராந்தியங்களில் உள்ள முக்கிய நகரங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் விமான நிலையங்கள் லுட்ஸ்க் நகரில் உள்ளன. இந்த நகரின் மீது சரக்கு மற்றும் விமானப்படை விமானங்கள் பரப்பது வழக்கமான ஒன்று.

உக்ரைனின் வடக்கு பிராந்தியம் ரஷ்யாவை எதிர்த்து போரிடுவதற்கு முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது. 

தொடர் தாக்குதல்

மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுதங்களை இங்கேதான் இறக்குமதி செய்து, மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த சப்ளைக்கு இடையூறு விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த ஜூலை 4ஆம் திகதி ரஷ்யா இது போன்று மிகப்பெரிய தாக்குதலை நடத்தியிருந்தது. உக்ரைன் எல்லையின் முன்பகுதியில் சுமார் ஆயிரம் கி.மீ. தூரம் வரையில் ஆக்கிரமிப்பை விரிவுப்படுத்த ரஷ்யா தற்போது தாக்குதலை அதிகரித்துள்ளது.

https://www.youtube.com/embed/Xpt8UK6_Wfc

NO COMMENTS

Exit mobile version