Home இலங்கை சமூகம் இலங்கை வந்த ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த கதி

இலங்கை வந்த ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த கதி

0

பதுளை-கொழும்பு பொடி மெனிகே தொடருந்தில் இருந்து தவறி விழுந்து ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடருந்து மிதிப்பலகையில் இருந்து, செல்ஃபி எடுக்க முயன்ற நிலையில், பதுளை மற்றும் ஹாலி எல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மிதிப்பலகையில் சென்று கொண்டிருந்த போது ஒரு பாறையில் மோதி தொடருந்தில் இருந்து விழுந்து பலத்த காயமடைந்த அவர், பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்த நிலையில், சம்பவத்தில் உயிரிழந்தவர் 53 வயதான பெர்மினோவா ஓல்கா என்ற ரஷ்ய நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.    

NO COMMENTS

Exit mobile version