Home உலகம் உக்ரைனில் ரஷ்யாவின் பயங்கர தாக்குதல்: குழந்தை உட்பட பலர் பலி

உக்ரைனில் ரஷ்யாவின் பயங்கர தாக்குதல்: குழந்தை உட்பட பலர் பலி

0

உக்ரைனில் (Ukraine) ரஷ்ய (Russia) நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரஷ்ய தாக்குதலில் டினிப்ரோவில் ஏழு பேரும், சமரில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர்.

ட்ரோன் தாக்குதல் 

வடகிழக்கு உக்ரைனின் சுமி பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஐந்து வயது குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

முன்னெச்சரிக்கையாக மாஸ்கோவின் இரண்டு முக்கிய விமான நிலையங்களான வுனுகோவோ மற்றும் ஷெரெமெட்டியோவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் 

இதற்கிடையில், உக்ரைனில் இருந்து வந்த 20 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய விண்வெளி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளின் இராணுவ உதவியை மேலும் நாடியுள்ளார்.

நெதர்லாந்தின் ஹேக்கில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை ஜெலென்ஸ்கி சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version