Home இலங்கை சமூகம் வர்த்தக சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

வர்த்தக சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

வர்த்தக சமூகம், அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்கத் தவறினால், சில பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியேற்படும் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ(Nalin Fernando) எச்சரித்துள்ளார்.

அத்துடன், நுகர்வோர் சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

அரசாங்கம் வழங்கும் சலுகைகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விதிவிலக்கான தலைமைத்துவத்தினால் கடந்த சில வருடங்களாக நிலவி வந்த நெருக்கடிகள் தீர்க்கப்பட்டுள்ளன.

இந்த வெற்றியை அடைய நமது அரசு பல திட்டங்ளை செயல்படுத்தி அதன் பலனை தற்போது மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இந்தநிலையில்,15 அத்தியாவசியப் பொருட்களின் விலை வாரம் ஒருமுறை அறிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோர் பெற்றுக் கொள்ளவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எதிர்வரும் நாட்களில் வர்த்தக சங்கங்களுடன் விவாதிக்க திட்டமிட்டுள்ளது என்றும் அமைச்சர் வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

  

NO COMMENTS

Exit mobile version