முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற வகையில் இரண்டாம் நிலையினருக்கு அரசியல் செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார் எனவும் நாங்கள் அதை செயற்படுத்தி செல்கிறோம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடை பேரணிக்கு உதவி செய்த ஐக்கிய தேசிய கட்சியின் கிராமத்து தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐ.தே.கவின் திட்டம்
தொடர்ந்து பெசிய அவர்,
“அனைத்து கட்சிகளும், தமது பலத்தை அதிகரித்துக் கொண்டு மக்கள் சிறப்பாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் வரை எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அழுத்தங்களை பிரயோகிப்பதே எமது நோக்கமாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அதற்கான பலன் எதிர்காலத்தில் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
