நடிகை சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். இந்நிலையில் தற்போது அவர் ஹிந்தியில் உருவாகும் ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.
ரன்பீர் கபூர் ராமர் ரோலில் நடிக்க சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார். சாய் பல்லவி சீதையாக நடிப்பதால் அவர் சைவமாக மாறிவிட்டார் என ஒரு செய்தி பரவியது. ஆனால் அது பொய்யான செய்தி, வதந்தி பரப்பாதீங்க என சாய் பல்லவியே கோபமாக பதிவிட்டு இருந்தார்.
காசி விஸ்வநாதர் கோவிலில்..
இந்நிலையில் தற்போது சாய் பல்லவி காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன.