Home சினிமா அமரன் பட வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய சாய் பல்லவி… ரஜினி படத்தில் நடிக்க இத்தனை...

அமரன் பட வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய சாய் பல்லவி… ரஜினி படத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?

0

சாய் பல்லவி

சாய் பல்லவி, தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளில் ரசிகர்களுக்கு மிகவும் தனியாக தெரிபவர்.

கஸ்தூரிமான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சில படங்களில் நாயகி தோழியாகவே நடித்து வந்தார். அதன்பின் மலையாள படமான பிரேமம் பெரிய ரீச் கொடுக்க இப்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகிகள் லிஸ்டில் டாப்பில் உள்ளார்.

கடைசியாக இவரது நடிப்பில் அமரன் படம் வெளியானது. சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இப்படம் மாபெரும் ஹிட்டாக அமைந்தது.

சீரியல் நடிகரும், Heart Beat வெப் தொடர் நடிகருமான ராமிற்கு திருமணம் முடிந்தது… அழகிய ஜோடியின் போட்டோ

சம்பளம்

இப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிக்க ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர் 173 படத்தில் சாய் பல்லவி நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக கூறப்பட்டது, ஆனால் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்குகிறார் என்கின்றனர்.

இந்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இப்படத்திற்காக சாய் பல்லவி ரூ. 15 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version