Home இலங்கை அரசியல் நாட்டில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு! சஜித் வெளியிடும் தகவல்கள்

நாட்டில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு! சஜித் வெளியிடும் தகவல்கள்

0

என்டிபயாடிக் (எதிர்ப்புச் சக்திக்கான மருந்து), மயக்க மருந்து மற்றும் வலி நிவாரணி போன்ற மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

பிலியந்தலையில் மக்கந்தன சங்கல்ப விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இலவச மருத்துவம் என்பது அரசு மருத்துவமனையில் முருந்துக்கான பற்றுச்சீட்டைப் பெற்று தனியார் மருந்தகத்தில் மருந்து வாங்குவது அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். 

சஜித்தின் கவலை 

தொடர்ந்து இது தொடர்பில் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, 

 தனியார் மருந்தகங்களில் கூட, இந்த மருந்துகளின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நமது நாட்டிற்கு ஒரு சிறந்த சேவையான இலவச மருத்துவம் என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் அழிவடைந்து செல்கின்றது.  

நோயாளர்களுக்குச் சரியான நேரத்தில் சேவைகள் வழங்கப்பட வேண்டும், இலவச சுகாதாரம் என்பது அரசு மருத்துவமனையில் சேவையை பெற்று தனியார் மருந்தகத்திலிருந்து மருந்து கொள்வனவு செய்வதல்ல. 

இந்த இலவச சுகாதார சேவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version