Home இலங்கை அரசியல் சஜித் தரப்பு முக்கியஸ்தர் கட்சியிலிருந்து விலகல்

சஜித் தரப்பு முக்கியஸ்தர் கட்சியிலிருந்து விலகல்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளர் ரெஹான் ஜயவிக்ரம கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்சியின் கொள்கைகளுக்கும் தமது கொள்கைகளுக்கும் இடையில் மனச்சாட்சியின் பிரகாரம் பாரிய இடைவெளி காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வரும் நிலையில் கட்சி அரசியலுக்கு அப்பால்பட்ட கொள்கை முன்னெடுப்புகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களை எதிா்கொள்ள புதிய யோசனைகள் முன்வைக்கப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சுயாதீனமான பாதையில் பயணிப்பதற்கு இது சிறந்த தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் தனது தனிப்பட்ட தீர்மானம் எனவும் மக்களுக்கு மெய்யாகவே சேவை செய்யும் நோக்கில் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய போதிலும் அரசியலில் தாம் தொடர்ந்தும் ஈடுபடப் போவதாக ரெஹான் ஜயவிக்ரம தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ரெஹான் ஜயவிக்ரம வெலிகம நகரசபையின் முன்னாள் நகர பிதா என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version