Home இலங்கை அரசியல் இலங்கைக்கு அவுஸ்திரேலியா உதவ வேண்டும்: சஜித் பிரேமதாச கோரிக்கை

இலங்கைக்கு அவுஸ்திரேலியா உதவ வேண்டும்: சஜித் பிரேமதாச கோரிக்கை

0

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கத் தேவையான உதவியை அவுஸ்திரேலியாவிடம் இருந்து பெற்றுத் தருமாறு அந்நாட்டு ஆளுநர்
நாயகத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய்
மோஸ்டினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட
சந்திப்பு கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ
வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

இதன்போதே, சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்தை வாய்ப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் அங்கு
நேற்றுமுன்தினம்(07.08.2025) வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வின்போதே மேற்படி இருவரும்
இவ்வாறு சந்தித்துக் கலந்துரையாடினர்.

அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவி வரும் நீண்டகால நட்புறவை
மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி இங்கு சுமுகமான உரையாடலில்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஈடுபட்டார்.
 

இலங்கை ஏற்றுமதி சார்ந்த பொருட்களுக்கு அவுஸ்திரேலியாவில் அதிக சந்தை
வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version