Home இலங்கை அரசியல் தேசிய துக்க தினத்தை அறிவிக்குமாறு கோரிக்கை

தேசிய துக்க தினத்தை அறிவிக்குமாறு கோரிக்கை

0

அண்மைய பெரும் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக அரசு ஒரு தேசிய துக்க தினத்தை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

“இந்த பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மரியாதை செலுத்த குறைந்தது செய்ய வேண்டிய ஒன்றாவது இதுதான் — ஒரு துக்க தினத்தை அறிவிக்க வேண்டுமென” என அவர் கோரியுள்ளார்.

பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பது நமக்கு கடவுள் அளித்த புனித கடமை எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், இலங்கையின் கடினமான இந்த நேரத்தில் உதவிக்கரம் நீட்டிய அனைத்துநாடுகளுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.  

NO COMMENTS

Exit mobile version