Home இலங்கை சமூகம் ஆளும் கட்சி உறுப்பினரிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோரிய சஜித் தரப்பு

ஆளும் கட்சி உறுப்பினரிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோரிய சஜித் தரப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவிடம் (Lakmali Hemachandra) ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன (Prasad Siriwardana) மன்னிப்பு கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தாம் வெளியிட்ட முரட்டுத்தனமான கருத்துக்களுக்காக அவர் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான் பேசிக் கொண்டிருக்கும் போது தனது ஒலிவாங்கி துண்டிக்கப்பட்டதால், தான்
ஆக்ரோசமாக நடந்து கொண்டதாக பிரசாத் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க அடுத்த ஜனாதிபதியாக இருப்பார் என பிரசாத் சிறிவர்தன தெரிவித்த நிலையில், குறித்த இரண்டு நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்போது லக்மாலி ஹேமச்சந்திர, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்கவை (
Anura Kumara Dissanayake) அவமதித்ததாக தெரிவித்து சிறிவர்த்தனவின் மீது குற்றச்சாட்டை
முன்வைத்தார்.

இந்தநிலையில், பிரசாத் சிறிவர்தன மன்னிப்பு கோரியுள்ளதுடன் இது போன்ற மேலும் பல அண்மை செய்திகளுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/8DkiBm3Ue5E

NO COMMENTS

Exit mobile version