Home இலங்கை சமூகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: நீதிமன்றத்தை நாட நடவடிக்கை

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: நீதிமன்றத்தை நாட நடவடிக்கை

0

தேயிலை உற்பத்திக்கான அதிக செலவு காரணமாக தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க முடியாது என தோட்ட முதலாளிமார் சங்கம் தெரிவித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 30 ஆம் திகதி இரவு முதல் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேயிலைத் தோட்டக் கம்பனிகளுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்தை அணுக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

கொழும்பில் முக்கிய கலந்துரையாடல்

கொழும்பில் (02) திகதி தேயிலைத் தோட்டக் கம்பனிகளின் உயர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொட்டகலையில் இடம்பெற்ற தொழிலாளர் தின நிகழ்வில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் ஹோட்டலுக்குள் நடந்த பரபரப்பு – அதிரடியாக கைது செய்யப்பட்ட மாணவர்கள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version