Home இலங்கை சமூகம் வைத்திய அதிகாரிகளின் கூடுதல் நேர மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள் குறித்து அமைச்சர் விளக்கம்

வைத்திய அதிகாரிகளின் கூடுதல் நேர மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள் குறித்து அமைச்சர் விளக்கம்

0

அடிப்படை சம்பளம் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்பட்டாலும், வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட மொத்த அடிப்படை சம்பளத்தின் படி வைத்திய அதிகாரிகளின் கூடுதல் நேர மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள் கணக்கிடப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதனால் மருத்துவர்கள் தங்கள் கூடுதல் நேர கொடுப்பனவுகள் குறித்து கவலைப்பட எந்த காரணமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவ அதிகாரிகளின் சம்பளம்

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் மருத்துவ அதிகாரிகளின் சம்பளம் அதிகமாக இருக்கும்.

ஆரம்ப நிலை வைத்திய அதிகாரியின் அடிப்படை சம்பளம் ரூ.26,000 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version