Home இலங்கை சமூகம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம்! பிரதி அமைச்சர்

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம்! பிரதி அமைச்சர்

0

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக இருந்த 1350 ரூபாவை, நாங்கள்
1750 ரூபாவாக உயர்த்தி இருக்கிறோம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்
பிரதீப் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(9) திருகோணமலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களிலே சிலர் கூறினார்கள்.முடிந்தால் தேசியமக்கள் சக்தியினர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 10 ரூபாவினால் கூட்டுங்கள் என்று.

சம்பள அதிகரிப்பு

இந்த நிலையிலே எமது அரசாங்கள் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 200 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

மேலும், தனியார் தோட்டங்களிலே பணிபுரிகின்ற இந்த நன்மைகள் கிடைப்பதற்கு நாங்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றோம்.

அத்தோடு, இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மலையக மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version