Home இலங்கை அரசியல் இசைப்பிரியாவின் கொலைக்குப் பின்னால் உள்ள புலனாய்வாளர்! சபையில் சிறிநேசன் கேள்வி

இசைப்பிரியாவின் கொலைக்குப் பின்னால் உள்ள புலனாய்வாளர்! சபையில் சிறிநேசன் கேள்வி

0

ஊடகவியலாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பீள்ட் மார்சல் சரத் பொன்சேக்கா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட 2ஆம் நாள் வாசிப்பு மீதான வாவாதத்தில் கருத்து தெரிவிக்கம்போதே இதனை கூறியுள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது இலங்கையில் பெரும் மனித பேரவளம் இடம்பெற்றுள்ளது.

மத்திய முகாம் என்ற இடத்தில் கோணேஸ்வரி என்ற தாய் என்ற தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டடு கொலை செய்யப்பட்டதர். அதே போல சாராதாம்பால் என்பவர் புங்குடுதீவில் கொலை செய்யப்பட்டார்.

இசைப்பிரியாவின் கொலை

மேலும் கிரிசாந்தி சுண்டுக்குளியில் கொலை செய்யப்பட்டார்.

அடுத்ததாக இசைப்பிரியா என்ற ஊடகர் பாலியல் அத்துமீறலுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடத்தில் பீள்ட் மார்சல் சரத் பொன்சேக்கா சுயாதீனமாக சில விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த கருத்துக்களின் அடிப்படையில் , இசைப்பிரியாவின் கொலைக்கு காரணமாக இருந்தவர் ஒரு புலனாய்வு பனிப்பாளர் என்றும், ஜகத் ஜயசூரிய என்பவரையும் அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இந்த சாட்சியம் இறுதி யுத்தத்தில் பங்கு கொண்ட இராணுவ தளபதி ஒப்புதலில் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

NO COMMENTS

Exit mobile version