Home இலங்கை அரசியல் 200 ரூபாய்க்கு எதிர்ப்பு வெளியிட்ட நாமலின் மிகப்பெரும் மோசடி! அடுத்தடுத்து வெளிவரும் தரவுகள்

200 ரூபாய்க்கு எதிர்ப்பு வெளியிட்ட நாமலின் மிகப்பெரும் மோசடி! அடுத்தடுத்து வெளிவரும் தரவுகள்

0

அரசாங்கத்திடம் இருந்து 200 ரூபாயும் மற்றும் கம்பனிகளிடம் இருந்து 200 ரூபாயும் என மொத்தம் 400 ரூபாய் பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்பு இந்த வரவு செலவு திட்டத்தில் செய்யப்பட்டது.

இதற்கு மலையக மக்கள் பெரும் ஆதரவை வெளியிட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

அதாவது தனியார் கம்பனிகளுக்கு கீழுள்ள நிறுவனங்களுக்கு எவ்வாறு அரசாங்க பணத்தை வழங்க முடியும் என்ற அடிப்படையில் எதிர்ப்பு வலுத்தது.

இவ்வாறான எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டிற்கு மலையக மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் அவர்களுக்கு எதிராக போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.

இதையடுத்து, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்ததுடன் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமே தனது ஆதரவை வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருந்த நிலையில் பிறகு அவருமே ஆதரவளிப்பதாக கருத்து வெளியிட்டிருந்தார்.

இவ்வாறு, ஒரு 200 ரூபாய்க்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட நாமல் ராஜபக்சதான் தனது சொந்த தேவைக்கு இலட்சக்கணக்கில் அரச நிதியை பயன்படுத்தியுள்ளார்.

அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பதாம் திகதி அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு கால்டன் இல்லத்தில் பௌத்த வழிபாடுகளுக்கும் மற்றும் கால்டன் பாடசாலையில் சித்திரை புதுவருட கொண்டாட்டத்திற்கு சுமார் ரூபாய் 660.000 அவரால் செலவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையைில் காலம் காலமாக மக்கள் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பல வருடங்களாக அட்டை, மழை, லயன் வீடு மற்றும் வறுமையின் பிடி என வாழ்ந்து நாட்டின் பொருளாதாரத்தை நிலைநாட்டும் மக்களுக்கு ஒரு 200 ரூபாய் ஒதுக்கப்பட்டதை ஏற்றுகொள்ள முடியவில்லை.

இவ்வாறு தனிப்பட்ட செலவுக்கு பயன்படுத்தபட்ட அரச நிதியின் விவகாரம் மற்றும் பலதரப்பட்ட அண்மைய அரசியல்சார் விடயம் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் இன்றைய டொப் ஸ்டோரிஸ் நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/SON9d_nU2Ng

NO COMMENTS

Exit mobile version